தமிழகத்தில் இன்றைக்கு 15,659…! உச்சத்திலும் உச்சம் போன கொரோனா…!
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,659 ஆக பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை உச்சத்தில் இருக்கிறது. கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு 13 ஆயிரத்தை கடந்து கொரோனா பாதிப்புகள் பதிவானது. இன்று உச்சத்திலும் உச்சமாக முன் எப்போதும் இல்லாத வகையில் 15,659 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது.
ஒரே நாளில் 11,065 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் ஆகி உள்ளனர். இதையடுத்து ஒட்டு மொத்தமாக குணம் பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9.63 லட்சமாக இருக்கிறது. இன்று ஒரு நாளில் மட்டும் 1 லட்சத்து 26 ஆயிரத்து 298 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
சென்னையில் இன்று மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4206 ஆகும். தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 82 பேர் பலியாக, ஒட்டு மொத்த உயிரிழப்பு 13557 ஆக உயர்ந்துள்ளது.