Sunday, May 04 12:29 pm

Breaking News

Trending News :

no image

ஆபத்து… தென் தமிழகத்துக்கு…! வானிலை மையம் அவசர அறிவிப்பு


சென்னை: தென் தமிழகத்துக்கு இந்திய வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையால் மக்கள் தரப்பில் பரபரப்பு எழுந்துள்ளது.

சென்னை தத்தளிக்கிறது என்ற யதார்த்தம், அதன் பாதிப்பு மறைவதற்குள் தென் தமிழகம் தற்போது தண்ணீரில் தத்தளிக்கிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திருச்செந்தூர், விருதுநகர், கோவில்பட்டி, காயல்பட்டனம் என மிக அதிக கனமழை பெய்த வண்ணம் உள்ளது.

தொடர் கனமழையால் தெருக்களில் இடுப்பளவு தண்ணீர் புகுந்துள்ளது. பல வீடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு ஒட்டு மொத்தமாக மக்கள் இயல்வு வாழ்க்கை முடங்கி உள்ளது.

தென்மாவட்டங்களுக்கு செல்லும் பல விரைவு ரயில்கள் மழை தாக்கத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளன. காயல்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடியில் இதற்கு முன்னர் இப்படி ஒரு பேய் மழையை பார்த்தது இல்லை என்று மக்கள் அதிரும் அளவுக்கு நிலைமை காணப்படுகிறது.

அரசு இயந்திரம் முழு வீச்சில் களப்பணிகளில் இறங்கி இருந்தாலும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. குமரிக்கடல் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது.

அதனால் தென் தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளதாக இந்திய வானிலை மையம் கூறி உள்ளது.

Most Popular