Sunday, May 04 01:08 pm

Breaking News

Trending News :

no image

மிஸ் பண்ணாதீங்க…! இன்றைய TOP 10 News….!


தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்:

*வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

• பட்டாபிராம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் இன்று மேற்கொள்ள இருப்பதன் காரணமாக, இன்றிரவு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

*உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 11 பேர் பலியான சம்பவத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

* பிரசித்தி பெற்ற உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் கோயில் நடை ஏப்ரல் மாதம் 27ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

* உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.42 கோடியாக உயர்ந்துள்ளது.

* தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்ற ஆல் இந்திய லீடராக முதலமைச்சர் ஸ்டாலின் உருமாறி இருக்கிறார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.

* சென்னையில் இன்று 251வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் உள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

* இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து இன்கோவாக் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

* பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி உள்ள ஷாரூக்கானின் பதான் திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

* இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று ராஞ்சியுல் நடக்க உள்ளது.

Most Popular