ஜெ.வை அசிங்கப்படுத்தினாரா சீமான்…? வைரலாகும் வீடியோ
சென்னை: அதிரடியாக பேசி கூட்டத்தில் கைத்தட்டல்களை ஆர்ப்பரிக்கும் சீமான் வீடியோ ஒன்று ஜெயலலிதாவை அவமானப்படுத்தவதாக உள்ளதாக என்று கூறி வலம் வருகிறது.
எங்கு சென்றாலும் சரி… அல்லது எந்த கூட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பிலும் சரி… பேச்சில் ஒரு அதிரடி… ஆவேசம் என்பது நாம் தமிழர் சீமானின் இயல்பு. இதை பல சந்தர்ப்பங்களில் அவரது பேச்சை உற்று நோக்குபவர்கள் காணலாம்.
பொதுவாக அரசியல்வாதிகள் பேசும் பேச்சுகள் காலங்கள் கடந்த பின்னரும் வேறு, வேறு பொருளை சுட்டிக்காட்டுவதாக இருக்கும். அப்படித்தான்… சீமானின் பழைய வீடியோக்களை எடுத்து இணையவாசிகள் தற்போது உருட்டி வருகின்றனர்.
அதில் குறிப்பாக ஜெயலலிதாவை பற்றி அவர் பேசியதாக ஒரு வீடியோ சக்கை போடு போடுகிறது. தேர்தல் நேரத்தில் அதிமுகவையும், ஜெயலலிதா ஆதரவு நிலைப்பாட்டையும் சீமான் எடுத்தவர் என்பது பலரும் அறிந்த ஒன்று. இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்ற அவரின் வசனம் இப்போதும் பிரபலம்.
இப்படி இருக்கக்கூடிய சூழலில் அவர் பேசிய ஒரு வீடியோவை பலரும் ட்ரோல் ஆக்கி வருகின்றனர். செய்தியாளர் ஒருவரிடம் நேர்காணலின் போது 2015ம் ஆண்டு வெள்ளம் குறித்த பேச்சு வருகிறது. அதில் அவர் பேசும் போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி பேசிய சில வரிகள் இடம்பெற்றுள்ளது.
டுவிட்டரில் இடம்பெற்றுள்ள சீமான் பேசிய அந்த வீடியோவை பலரும் தேடி share செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ;
https://twitter.com/razorturbokat/status/1734548043004088404
இப்போது அந்த வரியை கெட்டியாக பிடித்துக் கொண்ட பலரும் சீமான் எப்படி இவ்வாறு பேசலாம்? வாய் இருந்தால் என்ன வேணாலும் பேசலாமா? என்று பொரிந்து தள்ளுகின்றனர். சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கும் இந்த வீடியோவை பலரும் கேட்டுவிட்டு நகைச்சுவை என்ற ரீதியில் கடந்து சென்றாலும் நடுநிலையாளர்கள், சீமானின் அன்பு தம்பிகள் என சிலர் இருபிரிவாக பிரிந்து நின்று கம்பு சுற்ற ஆரம்பித்துள்ளனர்.
பதிலுக்கு பதில், கருத்துக்கு கருத்து… அப்புறம் வீடியோவுக்கு வீடியோ என்று கருணாநிதி குறித்தும், திமுக குறித்தும் பேசிய வீடியோக்களை பதிவிட்டு சமூக வலைதளத்தை vibe ஆகவே வைத்துள்ளனர்.