கிரிக்கெட்டுக்கு ‘குட்பை’ சொன்ன தல...! ரசிகர்கள் ஷாக்
சென்னை: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகவும் முக்கியமான கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. தல என்று தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து, சக போட்டியாளராக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வந்தார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.