#HappyBirthdayDhoni தோனி பைக் எத்தனை ரூபாய்க்கு விற்கப்பட்டது தெரியுமா..?
தோனிக்கு நாளை பிறந்த நாள் கொண்டாடப்படும் தருணத்தில் அவரது பைக் 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட தகவல் அறிந்தது ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் உலகின் சக்சஸ் கேப்டன் தல தோனி. இந்தியாவுக்காக உலக கோப்பையை வென்று காட்டியவர். ஐசிசி 3 கோப்பைகளையும் வென்றவர். அவரது அமைதி, திறமை, எதிலும் கூர்ந்து செயல்படுவது என தோனியின் ஸ்டைலே தனி தான்.
ஆக சிறந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வலம் வந்த அவருக்கு நாளை பிறந்த நாள். கடந்த ஒரு வாரமாக இணையம் முழுக்க தோனிமேனியா தான். எங்கு பார்த்தாலும், என்ன படித்தாலும் தோனி பற்றிய விவரங்கள் இல்லாமல் இல்லை.
தோனிக்கு பைக் என்றால் கொள்ளை பிரியம். அதிலும் தொடக்க காலத்தில் கோரக்பூரில் ரயில்வேயில் வேலையில் இருந்த போது தோனியின் பயணம் பைக்கில் தான். அவரின் முதல் பைக் யமஹாவின் ஆர்எக்ஸ் 135 வண்டி. 2003ம் ஆண்டு அந்த வண்டியை தோனி விற்றுவிட்டார்.
வண்டியை அவர் எந்த விலைக்கு விற்றார் என்று கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்..? வெறும் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்றிருக்கிறார். ஆனால், இப்போது தோனி வைத்திருக்கும் வாகனங்களை போட்டால் பட்டியல் எங்கோ போய்விடும்.
தோனி இப்போது வைத்திருப்பது விலை உயர்ந்த கார்கள் தான். ஹம்மர், பெராரி, ஸ்கார்ப்பியோ என அடுக்கிக் கொண்டே போகலாம். நாளை அவரக்கு பிறந்த நாள். ஆகவே நிச்சயம் ஏகப்பட்ட பரிசுகள் வந்துசேரும் என்று எதிர்பார்க்கலாம்..!