ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன பாஜகவின் ‘அந்த’ அமைச்சர்….! வாட் நெக்ஸ்ட்…?
டெல்லி: தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் திமுகவுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி திமுக ஆட்சி அமைக்கும் வகையில் தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து திமுக தமிழகத்தில் அரியணை ஏறுகிறது.
தமிழகம் முழுவதும் திமுக முக்கிய பிரமுகர்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளனர். நாடு முழுவதும் இருந்தும் பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள் திமுகவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந் நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த டுவிட்டர் பதிவை அவர் வெளியிட்டு உள்ளார். முதலமைச்சராகும் ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.