மகளாக நடித்தவரை மனைவியாக்கும் பிரபல நடிகர்…? லீக்கான சீக்ரெட்
டெல்லி: பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், மகளாக திரைப்படத்தில் நடித்தவரை திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தி திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் அமீர்கான். தொடக்க காலங்களில் வெறும் காதல் கதைகளின் நாயகனாக நடித்து வந்தார். பின்னாளில் வித்தியாசமான கதைகளத்தை தேர்வு செய்து அதில் நடித்து அசத்தியவர்.
அவரது நடிப்பில் வித்தியாசமான அதே நேரத்தில் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் தங்கல். இந்த படம் சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்றது. இப்போது தங்கல் படத்துக்கும், அமீர்கானின் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம் என்று என்ன தோன்றுகிறதா..?
அந்த படத்தில் தமது மகளாக நடித்தவரையே அமீர்கான் திருமணம் செய்து கொள்ள போவதாக ஒரு தகவல் பாலிவுட்டை ஆக்கிரமித்து இருக்கிறது. தங்கல் படத்தில் அவரது மகள்களில் ஒருவராக நடித்திருப்பவர் பாத்திமா சனா ஷேக்.
இவரை தான் மூன்றாவதாக அமீர்கான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக ஒரு தகவல் பாலிவுட்டை கலங்கடித்து வருகிறது. தங்கல் படத்தில் நடித்த போதே இருவருக்கும் நெருக்கமான பழக்கம் உள்ளதாக கூறப்பட்டது.
இருவரும் சேர்ந்து திரையுலகின் பல்வேறு விழாக்கள், நிகழ்ச்சிகளில் ஒன்றாக சுற்றி வந்தனர். ஒரு கட்டத்தில் இதுவே அமீர்கான் குடும்பத்தில் பிரச்னையாக உருமாறியதாகவும் கூறப்பட்டது.
இப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுவதன் மூலம் அனைத்தும் உண்மையே என்று கூற வைக்கிறது. முன்னதாக, தமது படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவ் என்பவரை 2005ம் ஆண்டு கரம் பிடித்தார் அமீர்கான்.
16 ஆண்டுகள் ஒன்றாக இல்லற வாழ்க்கையில் கலந்த அவர்கள் இப்போது பிரிந்துவிட்டனர். தங்களது பிரிவை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர். இவர்களின் பிரிவுக்கு பாத்திமா சனா ஷேக் தான் காரணம் என்ற பேச்சும் கூட இன்றளவில் உண்டு. எது எப்படி இருந்தாலும் அமீர்கானின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் என்பது தனிக்கதை…!