சென்னை மழை, போண்டா…! திமுக அரசை கேலி செய்த பிரபல நடிகை
சென்னை: சென்னை மாநகராட்சியின் மழைக்கால நடவடிக்கையை கேலி செய்து பிரபல நடிகை வினோதினி கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக கலக்கி வருபவர் வினோதினி. தமிழகத்தில் பாஜகவை எதிர்ப்பதாக கூறிக் கொள்ளும் சில பல திரையுலக நட்சத்திரங்களில் இவரும் முக்கியமானவர். கடந்த காலங்களில் பாஜகவை கழுவிய அவர், பின்னர் மக்கள் நீதி மய்யத்தில் ஐக்கியமானார்.
அவர் தற்போது சென்னை மழையையும், அரசின் நடவடிக்கையையும் கிண்டல் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அரசு என்ன செய்கிறது? மாநகராட்சி அதிகாரிகள் போண்டா தின்று கொண்டிருந்தனர், வேலை செய்யவில்லை என்று விமர்சித்துள்ள அவர், மக்கள் ஸ்மார்ட் ஆக உள்ளனர், எனவே தான் இந்த நகரத்துக்கு ஸ்மார்ட் சிட்டி என்று பெயர் என்று கலாய்த்துள்ளார்.
கிட்டத்தட்ட 2 நிமிடங்களுக்கு மேலாக தமிழக அரசையும், சென்னை மாநகராட்சியையும் விமர்சித்த வினோதினியை நெட்டிசன்ஸ் போட்டு தாக்கி இருக்கின்றனர்.
அதிமுக ஆட்சியில் எங்கே போனே? தூங்கிட்டியா? உன் தலைவர் கமல்ஹாசனை பேச சொல்லு என்று கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.
வினோதினியின் கிண்டல் வீடியோ இதன் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.