Sunday, May 04 12:15 pm

Breaking News

Trending News :

no image

காங்கிரசுக்கு அதிகாலை நடந்த சோகம்..! மறைந்தார் மூத்த தலைவர்…! சோனியா அதிர்ச்சி


டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அகமது படேல் இன்று காலமானார். அவருக்கு வயது 71.

அவர் கடந்த அக்டோபர் 1-ம் தேதி கொரோனாவில் பாதி்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதில் இருந்து குணமடைந்தாலும், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார்.

அகமது படேலின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் தாக்கம்  மற்ற உடல் உறுப்புகளும் பரவியது. இதையடுத்து, குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த 14ம் தேதி  அகமது படேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும், அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை. இந் நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அகமது படேல் இன்று அதிகாலை 3.30 மணியளவில் காலமானார்.

அவரது மறைவை மகன் பைசல் படேல் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். மறைந்த அகமது படேல், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராக பணியாற்றி, பல முக்கிய தருணங்களில் அவருக்கு பக்க பலமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular