ரூ,2500 கோடி மோசடி..! பாஜக ‘தலை’யை தூக்கிய அதிகாரிகள்
சென்னை: இப்படி ஒரு மோசடியா என்ற வாய்பிளக்க சம்பவத்தில் பாஜக முக்கிய தலையை அதிகாரிகள் மடக்கி உள்ளனர்.
மக்களின் நம்பிக்கையை நூதனமான முறையில் அறுவடை செய்து பணத்தை மோசடி செய்யும் கலை அவ்வளவு எளிதல்ல… ஆனால் குறைந்த முதலீடு, அதிக வட்டி என்ற கவர்ச்சிக்கு மவுசு குறையவில்லை என்பதை மெய்ப்பிக்கும் பொருட்டு, நடந்த மோசடி தமிழகத்தை உலுக்கியது.
ஆருத்ரா மோசடி…! 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 2438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. ஆருத்ரா நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்பிருப்பதாக பிரபல நடிகரும், பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில துணை தலைவர் ஆர்கே சுரேஷ் உள்ளிட்ட 4 பேர் தேடப்பட்டு வந்தனர். இந்த வழக்கில் லுக் அவுட் நோட்டீசும் பிறப்பட்டு இருந்தது.
இந் நிலையில், வரும் 12ம் தேதி இந்த விசாரணைக்கு ஆஜராகும் வரை தம்மை கைது செய்யக்கூடாது என்று ஆர்கே சுரேஷ் தொடர்ந்த வழக்கில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவர் சென்னை விமான நிலையம் வந்தார்.
ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் உள்ளதால் விமான நிலையத்திலேயே மடக்கி பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு விசாரணைக்கு தாம் வந்திருப்பதாக கூறி அவர் விவரங்களை கூற, அதை சரி பார்த்த அதிகாரிகள் பின்னர் அனுப்பி வைத்தனர். நாளை மறுதினம், ஆர் கே சுரேஷ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் ஆஜர் ஆவார் என்று தெரிகிறது.