Sunday, May 04 11:59 pm

Breaking News

Trending News :

no image

கடைசியில்... இஸ்ரோ விண்வெளி மையத்தையும் இழுத்து மூடிய கொரோனா...!


விசாகப்பட்டனம்: ஸ்ரீஹரி ஹோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளமான சதீஷ் தவான் விண்வெளி மைய ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறி இருப்பதாவது:48 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ராக்கெட் ஏவுதளமான சதீஷ் தவான் விண்வெளிமைய ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டு இருப்பதால் தற்காலிகமாக மையம் மூடப்படுகிறது.

1971 ம் ஆண்டு அக்., ஒன்றாம் தேதி விண்வெளி மையம் தோற்றுவிக்கப்பட்டது. 1979 ல் ரோகினி செயற்கை கோள் தோல்வி அடைந்த போதிலும் 1980 ம் ஆண்டில் செலுத்தப்பட் பிஎஸ்எல்வி3 செயற்கைகோள் தான் முதல் வெற்றி யை பதிவு செய்தது.

அதன் பின்னர் ஆண்டிற்கு ஒருமுறை அல்லது இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை என சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக 1999 ம் ஆண்டு முதல் 2019 வரையில் இருபது ஆண்டுகள் எந்த ஒரு குறுக்கீடும் இல்லாமல் உள்நாட்டு செயற்கைகோள் மட்டுமல்லாது வெளிநாட்டு செயற்கை கோள்களும் ஏவப்பட்ட வந்தன. இந்த காலகட்டத்தில் ராக்கெட் செலுத்தாத ஆண்டே இல்லை என கூறும் படியாக செயல்பட்டு வந்தது.

இந்த 2020 -ம் ஆண்டை விஷன் 2020 ஆக எடுத்து சந்திரயான்-2, ககன்யான், பி.எஸ்.எல்.வி-49, பி.எஸ்.எல்.விசி- 50 ஆகியவற்றை ஏப்ரல் மாதத்தில் முடிப்பது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவை அனைத்தையும் கொரோனா உடைத்தது. அடுத்த ஆண்டு வைரசின் தாக்கம் குறைந்து விட்டால் மீண்டும் சோதனை தொடங்கும். இந்தாண்டு எந்த ஒரு சோதனைகளும் இருக்காது என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Most Popular