வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய போறீங்களா..? இதோ உங்களுக்கான அறிவிப்பு…!
டெல்லி: தனிநபர் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வருமான வரித்துறையின் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 2020 - 21ஆம் நிதியாண்டிற்கான தனிநபர் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சூழல் காரணமாக, தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமானத்திற்குத் தணிக்கை தேவைப்படும் நிறுவனங்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நவம்பர்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தணிக்கை தேவைப்படாத தனி நபர்கள், ஊழியர்கள் ஆண்டுதோறும், ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்களுக்கு வருமான வரிப்பிடித்தம் தொடர்பான, 'படிவம் 16' ஜூலை 15ஆம் தேதிக்குள் வழங்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.