Sunday, May 04 09:11 pm

Breaking News

Trending News :

no image

பிரபல இளம் இயக்குநர் மெண்டல்…? கோர்ட்டுக்கு வந்த கேஸ்


பிரபல இளம் இயக்குநர் ஒருவரை மெண்டலாக அறிவிக்க வேண்டும், அவருக்கு உளவியல் ரீதியாக பரிசோதனை செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இளம் இயக்குநர்களில் இன்று முன்னணியில் இருப்பவர் லோகேஷ் கனகராஜ். வித்தியாசமான கதை களம், ஷூட்டிங் ஸ்பாட், ஸ்டைலான பாடல்கள் எடுப்பதில் அபாரமிக்கவர் என்று குறிப்பிடப்படக்கூடியவர்.

இவருக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள வழக்கு தான் இப்போது ஊரெங்கும் பேச்சு. வழக்கின் சாராம்சம் அவரை உளவியல் பரிசோதனைக்கு ஆளாக்க வேண்டும் என்பதே ஆகும்.

காரணம்.. அவர் எடுக்கும் படங்களில் வன்முறை நிறைந்திருக்கிறது, குறிப்பாக லியோ படத்தில் இத்தகைய காட்சிகள் அதிகம், எனவே அந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் , பட இயக்குநர் லோகேஷூக்கு உளவியல் பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மதுரையை சேர்ந்த ராஜூ முருகன் என்பவர் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

படத்தில் போதை பொருள் கடத்தல், கலவரம், துப்பாக்கி பிரயோகம் என பல காட்சிகள் உள்ளதாகவும், சமூக விரோத கருத்துகளை கூறுவதாகவும் உள்ளதால் அதை தடை செய்ய வேண்டும் என்றும் கோரி உள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர். லோகேஷ் தரப்பில் இருந்து வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை என்பதே இதற்கு காரணம்.

Most Popular