ஸ்கூல் பசங்களா..? இதை கேட்டீங்களா..? ஜாலி ஜாலி தான்
சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்களின் மகிழ்ச்சிக்கு ஏற்ப சந்தோஷமாக செய்தியை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஒரு காலத்தில் மழை, வெயில் என எந்த காலநிலை என்றாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றுவிடும் தருணம் இருந்தது. ஆனால் இப்போது சின்ன மழை என்றாலும் ஸ்கூலுக்கு லீவா..? எந்த மாவட்டத்துக்கு விடுமுறை விடுவாங்க? டிவி போட்டு பாரு… அதுல சொல்லியிருப்பாங்க என்று வாண்டுகளே wanted ஆக பேசுவது பார்க்க முடிகிறது.
அப்படி ஒரு சூழல் இன்றும் ஏற்பட்டு இருக்கிறது… தென்தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து தள்ளுகிறது. இன்று முதல் வரும் வெள்ளி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை மையம் அறிவித்தது போன்று, 2 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை மழை விடவில்லை… பெய்து கொண்டே இருக்கிறது.
விடாது தட்டி தூக்கும் கனமழையால் தாழ்வான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்திருக்கிறது. மழை தொடர்ந்து பெய்வதால் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.