மறுபடியும் மேலே... மேலே போகும் கேஸ் சிலிண்டர் விலை..! மயக்கம் போடும் மக்கள்..!
டெல்லி: கேஸ் சிலிண்டர் விலையில் மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது, இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சர்வதேச சந்தையில் காணப்படும் கச்சா எண்ணெய்யின் விலையை கொண்டே எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயம் செய்கின்றன. அதன்படி நாள்தோறும் விலைகள் தினசரி மாற்றி அமைக்கப்படுகின்றன.
அதே நேரத்தில் கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றி அமைக்கப்படுகிறது.ஆனால் முன் எப்போதும் இல்லாத வகையில் பிப்ரவரி மாதம் கேஸ் விலை 3 முறை மாற்றி அமைக்கப்பட்டது.
இந் நிலையில் இன்று கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஒரு கேஸ் சிலிண்டர் விலை 835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 810 ரூபாயில் இருந்து 825 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 610 ரூபாயாக இருந்த கேஸ் விலை, கடந்த ஜனவரியில் 710 ஆக இருந்தது. இப்போது அதுவும் படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு 835 ரூபாயாக ஆக்கப்பட்டு உள்ளது. தொடர் விலை உயர்வு சாமானிய மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது.