காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனாவால் பலி…! அரைக்கம்பத்தில் பறந்த கட்சி கொடி
சென்னை: கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 10ம் தேதி முதல் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவிக்கும் தொற்று இருந்ததால் அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது மனைவி சிகிச்சை குணமடைந்த நிலையில், வசந்தகுமார் தொடர்ந்து அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில், இன்று மாலை, சிகிச்சை பலனின்றி அவர் உயிர்பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது. சென்னை தி. நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படும் உடல் பின்னர் தொண்டர்கள் அஞ்சலிக்கு பின்னர் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது.