மாடர்ன் தியேட்டர்ஸ் சர்ச்சை…! பிரபல இயக்குநர் திடீர் ‘டுவிட்’
சென்னை: திமுகவுக்கு எதிராக மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம் சர்ச்சையாகி இருக்கும் நிலையில் திடீரென ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார் பிரபல இயக்குநர்.
சேலத்தில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்து மறைந்து தற்போது வெறும் நுழைவு வாயிலாக இருக்கிறது மாடர்ன் தியேட்டர்ஸ். இங்கு எம்ஜிஆர், கருணாநிதி, ஜானகி, ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் பணியாற்றியவர்கள்.
வரலாறு நெடிய கொண்ட இந்த தியேட்டர் இருக்கும் பகுதிக்கு சென்று அங்குள்ள நுழைவுவாயில் முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த சம்பவம் 4 மாதங்கள் முன்பு நடந்தது.
இப்படிப்பட்ட சூழலில் நுழைவு வாயிலை இடித்துவிட்டு அங்கு கருணாநிதி சிலை வைக்க அரசு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இவ்விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறிவிட்ட நிலையில், பிரபல இயக்குநர் சேரன் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
https://twitter.com/directorcheran/status/1735701985859715474
அதில் டிஆர் சுந்தரத்தின் பெருமையை போற்றி புகழ்ந்து வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகி திமுக மற்றும் ஸ்டாலினுக்கு எதிரான விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது.
இத்தனை நாளாக இல்லாமல் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் என்று இப்போது சொல்வது எப்படி? ஊர் முழுக்க சிலை வைக்கும் பழக்கம் போகவில்லையா? என்று கேள்விகள்,கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
சிலை வைக்கும் கலாச்சாரம் என்று ஒழியுமோ? என்ற முணுமுணுப்புகளும் எழுந்துள்ளன.