கடைசியில் முதலமைச்சருக்கும் கொரோனா…! வேளாண் அமைச்சருக்கும் பாசிட்டிவ்
ராஞ்சி: ஜார்கண்ட்டில் வேளாண் அமைச்சருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
அம்மாநில வேளாண் துறை அமைச்சராக இருப்பவர் பாதல் பட்ரலேக். தமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அவர் தமது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். ஆகையால் சில நாட்களாக தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லது கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
முன்னதாக ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரனுக்கு கொரோனா உறுதியானது. அவரது மனைவிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த விவரங்களை அவரது மகனும், மாநில முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் டுவிட்டரில் கூறி உள்ளார்.
இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது. தொடர்ந்து பல மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.