Sunday, May 04 12:39 pm

Breaking News

Trending News :

no image

மறைந்த எஸ்.பி.பி.க்காக முக்கிய ‘டுவிட்’ வெளியிட்ட முதலமைச்சர்….!


சென்னை: எஸ்.பி.பி. உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மறைந்த எஸ்.பி.பி.யின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நுங்கம் பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.பி. உடலுக்கு திரளானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந் நிலையில் எஸ்.பி.பி. உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று மு..ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கோரியிருந்தனர்.

Most Popular