Sunday, May 04 11:54 am

Breaking News

Trending News :

no image

லாக்டவுனை ஒரு வாரம் நீட்டித்த முதலமைச்சர்…! விடாது துரத்தும் கொரோனா…!


டெல்லி: தலைநகர் டெல்லியில் மேலும் ஒரு வாரம் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் மக்களை பாடாய் படுத்தி அவர்களை புதைகுழிக்கு அனுப்பி வருகிறது கொரோனா தொற்று. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப்பிரததேசம், கேரளா, தமிழகம் என நாள்தோறும் கொரோனா தொற்றில் உச்சத்தில் இருந்து மக்களை ஆட்டுவிக்கிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து மக்களை அதிர வைத்துள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று இல்லாத வீடுகளே இல்லாத நிலைமை காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. தினந்தோறும் தொற்றுகளின் எண்ணிக்கையும், பலிகளும் நினைத்து பார்க்க முடியாத அளவை எட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந் நிலையில், தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றால் நடைமுறையில் உள்ள பொது முடக்கம் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ள முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், தற்போது வரை நடைமுறைகள் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நீடிக்கும் என்றும் கூறி உள்ளார். 

Most Popular