இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் டாப் 10 செய்திகளை பார்க்கலாம்:
மிக்ஜாம் புயல், மழை, வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்ய அமைக்கப்பட்டு உள்ள மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது. இந்த குழுவினர் நாளை முதல் 2 நாட்கள் ஆய்வு செய்ய இருக்கிறது.
சத்தீஸ்கரின் புதிய முதலமைச்சராக பழங்குடியின தலைவர் விஷ்ணு தியோசாயை பாஜக தேர்வு செய்துள்ளது.
7 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின்னர் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் இன்று திறக்கப்படுகின்றன.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ள தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.
செங்கல்பட்டு அருகே சென்னைக்கு வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் தடம் புரண்டதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
மழை, வெள்ள பாதிப்பை தொடர்ந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறார்.
569வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சென்னை முழுவதும் கடந்த 6ம் தேதியில் இருந்து 9ம் தேதி வரை ஒட்டு மொத்தமாக 28,563 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளதாக மாநகராட்சி கூறி உள்ளது.
வெள்ளை மாளிகைக்கு வரவேண்டும் என்று உக்ரைன் அதிபருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
இடைவிடாத கனமழை எதிரொலியாக, கிங்ஸ்மீட் மைதானத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு உள்ளது.