Sunday, May 04 11:47 am

Breaking News

Trending News :

no image

பின்னாடி ஏறி.. முன்னாடி இறங்கணும்…! பஸ்சில் பாலோ பண்ண வேண்டியது என்ன..?


சென்னை: பேருந்துகளில் பயணிகள் செல்ல, என்னென்ன வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

கிட்டத்தட்ட 160 நாட்கள் கழித்து சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் இன்று காலை முதல் இயங்க ஆரம்பித்து உள்ளன. கொரோனா பரவல் இருக்கும் நிலையில், பேருந்து சேவையை பயன்படுத்த விரும்பும் பயணிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிமுறைகளை அரசு அறிவித்து உள்ளது.

அதாவது ஒரு பேருந்தில் குறைந்தபட்சம் 22 பயணிகளும், அதிகபட்சம் 24 பேரும் அனுமதிக்கப்படுவர். விளக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒரு வரிசையில் உள்ள இருக்கையில் ஒருவர் மட்டும் அமர்ந்து பயணிக்கலாம்.

சரி… பேருந்தில் பயணிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.. ஒரு இருக்கையில் ஒருவர் என்பதால் அடித்து,பிடித்து ஏறக்கூடாது, படிகளில் தொங்கவும் கூடாது.  

பேருந்தின் பின்பக்கம் மட்டுமே கட்டாயம் பேருந்தில் ஏற வேண்டும். இறங்க வேண்டும் என்றால் முன்பக்க படிக்கட்டுகள் வழியாக இறங்க வேண்டும். பின்பக்க படிக்கட்டில் ஏறும் போது அங்கு வைக்கப்பட்டு இருக்கும் கிருமிநாசினியை கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும்.

பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம். மாஸ்க் இல்லை என்றால் பேருந்தில் ஏற முடியாது. உள்ளே உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியாக எச்சில் துப்ப அனுமதி கிடையாது. பயணிகளை தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கும் வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

ஓட்டுனர்கள், நடத்துனர்கள் கிளவுஸ், மாஸ்க் அணிந்து கொண்டு தான் பணிக்கு வர வேண்டும். பணிமனைகளில் இருந்து பேருந்துகளை எடுத்துச் செல்லும், இரவு வரும் போதும் கிருமிநாசினிகள் தெளிக்க வேண்டும். இருவருக்கும் உடல் வெப்பச்சோதனையும் நடத்தப்படும்.

Most Popular