தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு வந்த சோதனை…! இப்படி ஒரு நிலைமையா..?
சென்னை; கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது கல்வியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
கல்வி உரிமை சட்டம்… நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் இந்த சட்டத்தின் கீழ் எல்கேஜி, முதலாம் வகுப்பு என தொடக்க வகுப்புகளில் சமூக, பொருளாதார ரீதியாக 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், 10 ஆண்டுகளாக தமிழகத்தில் இந்த நடைமுறை இருக்கிறது.
கிட்டத்தட்ட 8300 தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் படி 1, 03,330 இடங்கள் உள்ளன. ஜூலை 5ம் தேதி தொடங்கிய அட்மிஷனில் இதுவரை 64000 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். ஆனால் இதுவே கடந்தாண்டில் 1.2 லட்சம் பேர் விண்ணப்பித்து, அதில் 70000 பேர் சேர்ந்தனர்.
இந்தாண்டு இந்த அட்மிஷன் என்பது குறைந்து போயிருக்கிறது. அதற்காக பெற்றோர்களும், கல்வியாளர்களும் கூறும் காரணம் முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அவர்கள் கூறி இருப்பதாவது: இந்த ஆண்டில் பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பள்ளிகளை நாட தொடங்கி உள்ளனர். தனியார் பள்ளிகளில் டியுசன் கட்டணம் மட்டும் கிடையாது… ஆனால் மற்ற கட்டணங்கள் கட்டாயம் செலுத்தி விட வேண்டும்.
கொரோனா நெருக்கடியால் பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பெற்றோரில் ஒருவர் இழந்து போன பிள்ளைகள் பலர் உள்ளனர். அவர்கள் இப்போது அரசு பள்ளிகளை நாட தொடங்கிவிட்டனர். பொருளாதார சுமை, கல்வி கட்டணம் என பல நெருக்கடிகள் காரணமாக தனியார் பள்ளிகள் பக்கம் செல்ல முடியாத சூழல் உருவாகி விட்டது.
ஆனால் அதுவே அரசு பள்ளிகளிலோ அப்படி கிடையாது… இலவச கல்வி, புத்தகங்கள், சீருடை, சைக்கிள், இலவச மதிய உணவு என பல வசதிகள் அரசு அளிக்கிறது. இந்த காரணங்களை முன்வைத்து கிட்டத்தட்ட 75 ஆயிரம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு மாறிவிட்டனர் என்று கூறி உள்ளனர்.