குற்றாலம் போகலாம்…! ஆனா… குளிக்க முடியாது…!
தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் வெள்ள பெருக்கு காரணமாக குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. அதனால் குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. பின்னர் நீர்வரத்து குறைய சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஆகையால் குற்றாலத்தில் மீண்டும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பெண்கள் குளிக்கும் பகுதியில் தடுப்புகள் உடைந்தும் சேதம் அடைந்துள்ளன.
அதிகரிக்கும் நீர்வரத்தால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடுப்புகள் சரி செய்யப்பட்ட பின்னர் தான் அனுமதிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.