ஹேப்பி…! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: இடைவிடாது தொடரும் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. தொடர் மழையால் ஆறுகள், குளங்கள், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பருவமழையால் தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து உள்ளது.
இந் நிலையில், தமிழகத்தில் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்துக்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், அந்த மாவட்டத்துக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் கல்வித்துறை விடுமுறையை அறிவித்துள்ளது.
மேற்கண்ட நாளில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது என்றும் கண்டிப்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறை நாளை ஒரு நாள் மட்டுமே என்பதால், திங்களன்று பள்ளிகள் இயங்குமா என்பது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.