தக்காளி சட்னி… ரத்தம்…! ஸ்டாலினை வாரு 'வாரிய' குஷ்பு…!
சென்னை: டாஸ்மாக் ரொம்ப முக்கியமா…? உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்று முதலமைச்சர் ஸ்டாலினை பாஜகவின் குஷ்பு செமையாக கிண்டலடித்து இருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கிறது.
அதாவது வரும் 14ம் தேதியுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு, வரும் 21ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதே நேரத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று கூறி இருக்கிறார்.
டாஸ்மாக் திறப்பு என்ற அறிவிப்பு பாஜக கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறது. பாஜக மகளிரணி தலைவியும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட பலரும் அறிக்கைகள் வாயிலாக தமிழக அரசை வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு பயங்கரமாக கலாய்த்தும், கண்டித்தும் டுவிட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளதாவது:
டாஸ்மாக் எல்லாத்தையும் விட முக்கியமானதா…? வாவ்… என்ன ஒரு சிந்தனை…உங்களுக்கு வந்தா அது ரத்தம்? எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னியா..? தயவு செய்து பதில் சொல்லுங்கள் முதல்வர் ஸ்டாலின் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.