இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் டாப் 10 செய்திகளை பார்க்கலாம்:
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களில் அதி கனமழை புரட்டி எடுப்பதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர்.
தென்மாவட்டங்களில் மழை வெள்ள மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.
இடைவிடாத தொடர்மழை எதிரொலியாக கிட்டத்தட்ட 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறையை அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கின் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
தென்காசி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.
ஒரே நேரத்தில் நான்கு இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்து இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது.
மக்கள் பயன்படுத்தும் அன்றாட அத்யாவசிய பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டி உள்ளார்.
576வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
லிபியாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 61 அகதிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி யு மும்பா அணி வெற்றி பெற்றிருக்கிறது.