இடியாய் வந்த செய்தி…! கதறும் வைகோ
இப்படி ஒரு இடி செய்தி வரும் என்று மதிமுக மட்டும் அல்ல மற்ற கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுகவின் ஈரோடு தொகுதி எம்பி கணேசமூர்த்தி காலமானார்.
ஈரோடு எம்பி தொகுதியின் தற்போதைய எம்பி மதிமுக கணேசமூர்த்தி. 2019ம் ஆண்டு திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி. உதயசூரியன் சின்னத்தில் களம் கண்டு எம்பி ஆனார் கணேசமூர்த்தி. அவருக்கு இம்முறை அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஈரோட்டை திமுக எடுத்துக் கொண்டது.
மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது, அதில் வைகோ மகன் துரை வைகோ களம் காண்கிறார். சீட் இல்லாம மனக்கவலையில் இருந்த கணேசமூர்த்தி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
குடும்பத்தினர் பதறி அடித்துக் கொண்டு அவரை கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உடல்நிலை சீரியசாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். கணேசமூர்த்தி உயிர்பிழைக்க 50 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்டது.
இந் நிலையில் அதிகாலை மாரடைப்பு காரணமாக கணேசமூர்த்தி காலமானார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரின் மதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. வைகோ தரப்பில் கணேசமூர்த்தி மறைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக தொண்டர்கள் சோகத்துடன் கூறி உள்ளனர்.