Sunday, May 04 12:55 pm

Breaking News

Trending News :

no image

ஒட்டு துணி இல்ல.. பிரபல நடிகரின் லொள்ளு


உடம்பில் பொட்டு துணி இல்லை… இமயமலையில் இருந்த போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் பிரபல நடிகர்.

தல அஜித் நடித்த பில்லா 2 மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகம் ஆனவர் இந்தி நடிகர் வித்யூத் ஜாம்வால். துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவர்.

அஞ்சான் படத்திலும் நடித்த அவர், பின்னர் பாலிவுட்டில் பரபரப்பாக வலம் வர ஆரம்பித்தார். அவருக்கு நேற்று பிறந்த நாள். அதை பக்காவாக கொண்டாடி தள்ளியவர் ஒரு போட்டோ ஒன்றை வெளியிட்டு தற்போது வாங்கி கட்டிக் கொண்டு வருகிறார்.

சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டு இருப்பது பர்த்டே போட்டோக்கள் அல்ல… அதற்கு பதில் தமது நிர்வாண போட்டோக்களை போட்டு உவ்வே என்று பார்ப்போரை கதற வைத்துள்ளார்.

https://twitter.com/VidyutJammwal/status/1733705734364573771

தாம் இமயமலைக்கு சென்ற விவரம், அங்கு தமது அனுபவங்கள் ஆகியவற்றை கலவையாக்கி பதிவு,ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். என்ன தான் நடிகராக இருந்தாலும்… இப்படி ஆடைகளின்றி காட்சி தரும் போட்டோவை பொதுவெளியில் போடலாமா?

நடிகரின் நடவடிக்கைகளில் ஒழுக்கம் தேவையில்லையா? இது என்ன மாதிரியான டேஸ்ட்? என்று போட்டு தள்ளி வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

இதுபோன்ற டேஸ்ட் இவருக்கு முன்பே சில ஸ்டார் நடிகர்கள் வெளியிட்டு அதகளம் பண்ணியிருக்கிறார்கள். ரன்பீர் சிங், விஷ்ணு விஷால் என்ற 2 பேர் தான் அது… அதையும் போட்டு தள்ளி அர்ச்சித்து வருகின்றனர் சமூக வலை தளத்தில் ஆக்டிவ்வாக இருப்பவர்கள்…!

Most Popular