தேர்தல் முடிவுகளை ‘டக்கு’னு தெரிஞ்சுக்கணுமா..? இதோ செம ‘ஈசி’யான வழி…!
டெல்லி: தேர்தல் முடிவுகளை எளிதாக தெரிந்து கொள்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் நாளை மேற்கு வங்கம், அசாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. முற்பகல் 11 மணி அளவில் அனைத்து முன்னணி நிலவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் தேர்தல் முடிவுகளை எளிதாக தெரிந்து கொள்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது. அதன்படி, https://results.eco.gov.in/ என்ற இணையதளத்தில் ஒவ்வொரு தொகுதியின் சுற்று வாரியான நிலவரங்கள், வெற்றி, தோல்வி ஆகியவை வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் voter helpline என்ற ஆப் வாயிலாக நிலவரங்களை தெரிந்து கொள்ள முடியும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள முடிவுகள் அனைத்தும் இணையதளம், மொபைல் ஆப்களில் உடனுக்குடன் வெளியாகும்.