இனி ஸ்டாலின்தான் முதல்வர்…! உடனடியாக ராஜினாமா செய்த ‘அவர்’…!
சென்னை: தமிழக அரசின் ஆலோசகர் சண்முகம் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்.
நாடு முழுவதும் பல்வேறு ஊடகங்கள், ஏஜென்சிகள் நடத்திய கருத்துக் கணிப்புகள் தமிழக அரசியல் களம் அப்படியே பிரதிபலித்து இருக்கிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்று உள்ளது. இதையடுத்து 10 ஆண்டுகள் கழித்து திமுக மீண்டும் அரியணை ஏறுகிறது.
தனிபெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் நிலையில் நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட உள்ளார்.
இந்த சூழலில், திமுக ஆட்சி அமைய இருக்கும் தருணத்தில் அதிமுக ஆட்சியில் இருந்து போது உயர்பொறுப்புகளில் இருந்தவர்கள் அடுத்தடுத்து தங்களின் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் இருந்த தருணத்தில் அரசு தலைமை வழக்கறிஞராக இருநத விஜய்நாராயணன் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். அவரை தொடர்ந்து அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞர் சோமையாஜி பதவியில் இருந்து விலகி இருக்கிறார்.
இவர்களின் வரிசையில் தமிழகத்தில் தலைமை செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சண்முகம் தமது ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். அதற்கான ராஜினாமா கடிதத்தை தமிழக தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சனிடம் சண்முகம் வழங்கி இருக்கிறார். இவரை போன்று உயர் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் தொடர்ந்து ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.