கடைசியில் நடந்த ‘டுவிஸ்ட்’…! கமல் தொகுதி ரிசல்ட் இதோ…!
சென்னை: கோவை தெற்கு தொகுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன் தோல்வி அடைந்துள்ளார்.
தமிழகத்தில் ஸ்டார் தொகுதியாக அடையாளப்படுத்தப்பட்ட தொகுதி கோவை தெற்கு. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார், பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டனர். சென்னையில் இருக்கும் எத்தனையோ தொகுதிகளை விட்டுவிட்டு கோவை தெற்கில் களம் கண்டார்.
பிரச்சாரத்தின் போது அவரது நடவடிக்கை பலரையும் ஆச்சரியப்படுத்தியது. காலை, மாலை நேரங்களில் வாக்கிங் சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் ஆட்டோவில் சென்றார். அப்படி, இப்படி என்று தொகுதிக்குள் வலம் வந்த அவர் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டியாக வர்ணிக்கப்பட்டார்.
இந்த தொகுதியில் தொடக்கம் முதலே கமல்ஹாசன் பல சுற்றுகளில் முன்னிலை வகித்து ஆச்சரியம் காட்டினார். பின்னர் சுற்றுகளின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக அவர் 2ம் இடத்தில் பின் தங்கினார். அடுத்தடுத்து சுற்றுகளில் முன்னிலை, முன்னிலை மாறி மாறி வர கமல்ஹாசன் பின்தங்கிவிட்டார். கடைசியில் கோவை தெற்கில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற, கமல்ஹாசன் தோல்வியை சந்தித்துள்ளார்.