தனிக்கட்சி..? மெகா திட்டத்தில் அண்ணாமலை…!
சென்னை: தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்ற விவகாரத்தில் அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க தயாராகி விட்டதாக செய்திகள் கசிந்துள்ளன.
தமிழகத்தில் எப்படியாவது கட்சியை வலுப்படுத்திவிட வேண்டும் என்பதில் அகில இந்திய பாஜக தலைமை களத்தில் இறங்கி இருக்கிறது. அதற்காகவே பல ஸ்பெஷல் திட்டங்களை முன்வைத்து களப்பணியாற்றி வருகிறது. இளைஞர்களை குறி வைத்து எங்கோ இருந்த அண்ணாமலை என்ற ஐபிஎஸ் அதிகாரியை தமிழக பாஜகவாக அறிவித்தது.
கடந்த கால அரசியல் ஜித்துகள் இப்படி இருக்க கடந்த 1 வாரமாக தமிழக பாஜகவுக்குள் நடக்கும் சம்பவங்கள் வேற லெவலில் உள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த17ம் தேதி நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டம், அதில் பேசப்பட்ட விஷயம், தமிழகத்தில் பாஜக யாருடன் கூட்டணி என்ற விஷயத்தில் அண்ணாமலையின் கருத்து ஆகியவை டெல்லி தலைமையை அதிர வைத்துள்ளதாக தெரிகிறது.
வரும் மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்றால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை பேசியிருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது.
டெல்லியின் ஷாக்கை கண்ட அண்ணாமலை இதற்கு விளக்கமும் கொடுத்து உள்ளது இந்த விவகாரத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது. மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியது தனது தனிப்பட்ட கருத்து, பணம் தந்து தேர்தலை எதிர்கொள்வது என்ற நிலை வந்தால் அரசியலை விட்டே விலகி விடுவேன், நேர்மையான அரசியலை தனிப்பட்ட முறையில் கொண்டு வருவேன் என்று கூறி இருக்கிறார்.
அண்ணாமலையில் இத்தகைய பேட்டியை கண்ட தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் வேறு விதமாக கள விவரத்தை முன் வைக்கின்றனர். கட்சியின் சீனியர்களையும், அவர்களின் ஆதரவாளர்களையும் விமர்சித்து தனிநபரை முன்னிறுத்தும் விதமாக அண்ணாமலையின் நடவடிக்கைகள் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். அண்ணாமலை என்ற தனிநபர் துதியே தான் இதில் பிரதானமாக உள்ளது, மூத்த நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு காரணமாக, தனிக்கட்சி தொடங்கி விடுவோரா என்ற எண்ணத்தை உருவாக்குவதாகவே உள்ளது என்றும் சந்தேகிக்கின்றனர்.
தேசிய தலைமையின் அழைப்பின் பேரில் விரைவில் டெல்லிக்கு செல்ல உள்ள அண்ணாமலை, அதன் பின்னர் முக்கிய முடிவை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதையே தான் அவரது ஆதரவாளர்களும் எதிர்பார்ப்பதாகவும் அரசியல் களத்தில் குரல்கள் முன் வைக்கப்படுகின்றன.