Sunday, May 04 11:59 am

Breaking News

Trending News :

no image

ஆடுன்னு ஏன் கூப்பிடறேன்….? அண்ணாமலையை அதகளம் பண்ணிய பிடிஆர்


சென்னை: உங்களை ஏன் நான் பெயர் சொல்லி அழைப்பதில்லை என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி தந்துள்ளார்.

தமிழக அரசியலில் திமுகவை விமர்சிப்பதையே பாஜக முழு வேலையாக கொண்டுள்ளது. எந்த சந்தர்ப்பத்தில் எதை வைத்து அரசியல் செய்யலாம் என்றும் யோசனை செய்து வருகிறது. இதற்கு மதுரையில் பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்டதையே கூறலாம்.

தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பிய இந்த சம்பவத்தால் தேசிய அரசியலிலும், தமிழக அரசியலிலும் பாஜகவின் நன்மதிப்பு சேதாரமானது. மக்கள் மத்தியிலும் தாமரையின் மீதான விமர்சனங்களும் அதிகமானது. தாக்குதல் தொடர்பாக அண்ணாமலை ப்ளான் பண்ணியதாக ஒரு செல்போன் உரையாடல் வெளியானது.

அந்த உரையாடலில் இருப்பதும், பேசியதும் தான் நான் என்று ஒத்துக் கொண்ட அண்ணாமலை, அதை திரித்து, வெட்டி ஒட்டியதாக கூறி உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் அண்ணாமலையின் பெயரை தான் குறிப்பிடாமல் ஆடு என்று குறிப்பிடுவது ஏன் என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

தமது டுவிட்டர் பதிவில் அதற்கு என்று 4 பிரத்யேக காரணங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். தமது பதிவில் பிடிஆர் அண்ணாமலையின் பெயருக்கு பதில் ஆடு என்ற இமோஜியை பயன்படுத்தி உள்ளார். பழனிவேல் தியாகராஜன் தமது டுவிட்டரில் கூறி உள்ளதாவது:

நாட்டுக்காக உயிரை இழந்த தியாகி உடலை வைத்து பப்ளிசிட்டி தேடுபவர், தேசியக்கொடி பொருத்தப்பட்ட கார் மீது செருப்பு வீசும் திட்டத்தை ப்ளான் செய்தவர், பொய் பேசபவர், மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடுபவர் என கூறி உள்ளார்.

Most Popular