ம…..ரு என்று பேசிய சீமான்…! அதுவும் முன்னாள் அமைச்சரை பார்த்து…!
சென்னை: எங்கிட்ட ஒரு ம…ரும் புடுங்க முடியாது, உங்கிட்டேயும் அது இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கேவலமான வார்த்தைகளில் விமர்சித்துள்ளார் சீமான்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். எங்கு போனாலும், என்ன பேசினாலும் சர்ச்சைதான். அரசியல் களத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று நரம்புகள் தெறிக்க பேசிக் கொண்டே அரசியல் நடத்துபவர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரானது எப்படி என்ற விமர்சனங்களும், சந்தேகங்களும் அவரை விட்டு விலகி சென்ற பலரும் பொது வெளியில் போட்டுடைத்து வருகின்றனர்.
அவரின் அரசியல் மேடை பேச்சுகள், அதில் கூறும் விஷயங்கள் இன்றளவும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு சூப்பர் கன்டென்ட்டாக மாறும். தாம் பேசியதை அப்படியே மறந்து காலத்துக்கேற்ப மாற்றி பேசுவதில் திறமையானவர் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படும் நபர்.
இவருக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இப்போது ஏழாம் பொருத்தம். எம்ஜிஆருக்கு தொப்பி சின்னம், பேரறிஞர் அண்ணாவுக்கு மூக்கு பொடி சின்னம், ஜெயலலிதாவுக்கு கடலில் மேக்அப் சின்னம் வைப்பீர்களா என்று சீமான் பேசிய பேச்சுகள் தான் ஆரம்ப புள்ளி. அவரின் பேச்சு பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது இதுதான்:
மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவது என்பது ஏற்க முடியாது. பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவி எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி வாய் கொழுப்பாக பேசவேண்டாம். இந்த வாய் கொழுப்பை திமுகவிடம் காட்டுங்க. எங்கிட்ட காட்ட வேண்டாம். எங்கள் தலைவர்களை சீண்டி பார்க்க வேண்டாம். கடும் விளைவுகள் சந்திக்க நேரிடும்.
நீங்க போய் சிலோனில் ஆமைக்கறி சாப்பிட்டீங்களே? அப்ப உங்களுக்கு ஆமை சின்னம் வைப்பீர்களா? இது தான் இன்றைக்கு எல்லாரும் மனதிலும் எழும் கேள்வி என்று காட்டமாக விமர்சித்தார்.
ஜெயக்குமாரின் இந்த பேச்சு குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் கூறிய பதில் தான் இப்போது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
அவர் கூறியது இதுதான்: எனக்கு வாய் கொழுப்பு, அவங்களுக்கு (ஜெயக்குமார்) பணக்கொழுப்பு. இப்ப எந்த கொழுப்பு தேவைப்படுது.. எந்த கொழுப்பு தேவைப்படுது…?
ஜெயக்குமார் மேல மரியாதை வச்சிருக்கேன். அதை காப்பாத்திட்டு பேசாம போயிடணும். புரியுதா? எங்கிட்ட மோதக்கூடாது. இலக்கு எதுவும் இல்லாதவன்கிட்ட வார்த்தை விடாதே, சவால் விடாதே அப்படின்னு சொல்லியிருக்கிறாரு ஹிட்லர்.
எங்கிட்ட ஒரு ம…..ரும் கிடையாது… உங்கிட்டேயும் இல்லை… அதுவேற…ஹஹஹஹாங் (சீமான் சிரிப்பு). நீ பணம் வச்சிருக்கே, கோடி கோடியா கொள்ளையடிச்சு வச்சிருக்கே. என்னை எதிர்த்து பேசற நீ பிஜேபியை எதிர்த்து பேசுவியா?
காலையில் ரெய்டு வந்துடும். எனக்கு உயிரை தவிர இழக்கிறதுக்கு ஒண்ணும் கிடையாது. ஜெயக்குமாருக்கு பேசறதுக்கு ஒண்ணும் இல்லை. ஸ்டாலினை பத்தி பேசுனா உடனே அவரு வீட்டுக்கு ரெய்டு வரும். என்னை பேசுனா நான் மதிக்கிறேன், அண்ணன் என்பதால்.. பேசிட்டு போட்டும்.
கடும் விளைவுகள் வரும் சொல்றாரு… ஒரு இடத்தை அவரை சொல்ல சொல்லுங்க… யாருக்கு கடும் விளைவுகள் வருவது சந்திச்சு பார்ப்போம். இந்த சேட்டையை வச்சுக்கிட கூடாது… புரியுதா என்று சீமான் பேசி இருக்கிறார். அவரின் இந்த பேச்சு அதிமுக தரப்பில் உஷ்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது தான் உண்மை.