சூரியனுக்கு வணக்கம் வைக்கும் சிறுத்தை..! செம வீடியோ
சூரிய நமஸ்காரம் செய்யும் சிறுத்தை ஒன்றின் வீடியோ பார்ப்போரை மிரள வைக்கிறது.
வன அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் விலங்குகளின் வாழ்க்கை முறை, அதன் செயல்பாடுகள் குறித்து டுவிட்டர் பதிவில் வீடியோ வெளியிடுவது வழக்கம். அவரது வீடியோவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம்.
இப்போது, லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ பார்ப்போரை மிகவும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. யானை, குரங்கு, பாம்புகள் பற்றிய வீடியோக்களை பகிர்ந்து வந்த அவர், தற்போது சிறுத்தை ஒன்றின் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.
21 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில் சிறுத்தை ஒன்று தமது முன்னங்கால்களை நகர்த்தி சோம்பல் முறிக்கிறது. அதன் செய்கைகளை குறிப்பிடும் சுனந்தா நந்தா, சிறுத்தை சூரிய நமஸ்காரம் செய்கிறது என்று கூறி உள்ளார்.
ரஷ்யாவில் உள்ள சிறுத்தைகள் தேசிய பூங்காவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை மட்டும் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.