Sunday, May 04 01:00 pm

Breaking News

Trending News :

no image

முதல்வர் எடப்பாடியார் தாயார் நள்ளிரவில் மரணம்…! சொந்த ஊர் விரையும் இபிஎஸ்


எடப்பாடி: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள், செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுஞ்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட, சிலுவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர் மனைவி தவுசாயம்மாள். முதல்வரின் தாயாராவார்.

உடல்நலக்குறைவால் சேலத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந் நிலையில் அவர் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் காலமானார்.

காலமான அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிகோவிந்தராஜ் ஆகிய இரு மகன்களும், ரஞ்சிதம் () விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். அவரது கணவர் கருப்ப கவுண்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

தாயார் காலமானார் தகவல் அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

Most Popular