டிஸ்மிஸ் பண்ணிடுவேன்…! அமைச்சர்களிடம் ‘அசால்ட்’ காட்டிய முதல்வர்….!
சென்னை: துறையில் தவறு செய்தால் அமைச்சர்க டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிட்டதட்ட 10 ஆண்டுகள் கழித்து திமுக அரியணை ஏறி உள்ளது. அக்கட்சியின் தலைவர் மே 7ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றார். முதல்வராக பொறுப்பேற்றது முதல் அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினார்.
இந் நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து தான் திமுக முகாமில் ஒரே பேச்சாக இருக்கிறது. கொரோனா தடுப்பு பணிகள், நிதி நிலைமை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
அமைச்சரவை கூட்டங்கள் முடிந்த பின்னர் அதிகாரிகளை அனுப்பி வைத்துவிட்டு அனைத்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கியமான சில விஷயங்கள் குறித்து சீரியசாக விவாதித்து உள்ளார்.
அனைவரிடமும் தற்போதுள்ள நிலைமைகளை விரிவாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சில உத்தரவுகளையும் பிறப்பித்து உள்ளார். அமைச்சர்களாக பொறுப்பேற்று உள்ள அனைவரும் அவரவர் துறைகளில் உள்ள விஷயங்களை ஆழ்ந்து படித்து கொள்ளுங்கள்.
செய்தியாளர்கள் சந்திப்பில் துறைசார்ந்த அனைத்து விஷயங்களை தெளிவாக, ஆழமாக பேசுங்கள். எக்காரணத்தை கொண்டும் காவல்துறை சம்பந்தமான சிபாரிசுகளுக்கு போய்விடாதீர்கள், ஏதேனும் அவசியம் ஏற்படின் முதலமைச்சர் அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிய படுத்துங்கள்.
10 ஆண்டுகாலம் கழித்து ஆட்சியில் அமர்ந்திருக்கிறோம் என்பதால் எந்த சச்சரவுகளுக்கும் ஆளாக இடம்கொடுத்துவிடாதீர்கள், ஏதேனும் புகார் வந்தால் உடனடி நடவடிக்கை கட்டாயம் இருக்கும் என்று அனைத்து அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்ட்ரிக்டாக சொல்லி இருக்கிறார்.