‘தல’ படத்தில் நடித்த பிரேமம் பட இயக்குநர்…! என்ன படம் தெரியுமா..?
பிரேமம் படத்தை இயக்கி அனைவரின் கவனத்தை கவர்ந்த இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன், தல அஜித் படத்தில் நடித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் பிரேமம். சூப்பர் ஹிட் படமான இந்த படம் தென்னிந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்தது.
படம் ரிலீசான தருணத்தில் பிரேமம் இயக்குநர் என்று பரவலாக பேசப்பட்டது. பிரேமம் படத்துக்கு முன்னதாக அவர் நேரம் படத்தை இயக்கி இருந்தார். அந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படமாகும்.
இந் நிலையில் பிரேமம் புகழ் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தல அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட்டான தீனா படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளாராம். ஏஆர் முருகதாஸ் இயக்கிய அந்த படத்தில் அஜித், லைலா இருவரும் ரெஸ்டாரெண்டில் இருக்கும் போது ரவுடிகள் சிலர் வம்பிழுப்பர்.
அவர்களில் கல்லூரி மாணவர் போல டீ சர்ட் அணிந்து நடித்திருப்பாராம். அல்போன்ஸ் புத்ரன் நடித்த அந்த காட்சியை போட்டோவாக இப்போது இணையத்தில் உலா வருகிறது.