இவர் தான்ய்யா சூப்பரு…! பழசுன்னாலும் செம…!
ஒருவரின் நடவடிக்கை என்பது எந்த தருணங்களில் எப்படி இருக்க வேண்டும் என்பது ரொம்பவும் முக்கியம். அதிலும் உயர்ந்த பொறுப்பில், மக்கள் பிரதிநிதியாக இருக்கும் தருணத்தில் என்றால் இன்னமும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும்.
அதற்கு நான் தான் சரியான நபர் என்பதை நிரூபித்து அசத்தி இருக்கிறார் ஒரு நாட்டின் நபர். அவர் வேறு யாருமல்ல… ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின்தான்.
பொது இடங்களில் நடக்கும் நிகழ்வுகளில் அவரின் செயல்பாடு அற்புதமாக இருக்கும் என்பது மக்கள் அறிந்த ஒன்று. அண்மையில் ரஷ்யாவின் பெட்ரோலிய சுத்திரிகரிப்பு துறை பெண் அதிகாரி எலினா இலயுகினா என்பவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் அதிபர் புடினுடன் பேச ஆரம்பிக்க… அடுத்த சில நொடிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதை கவனித்த புடின் உடனடியாக அமைதியாகி மரியாதை செலுத்த தொடங்கினார். ஆனால் அருகில் இருந்த பெண் பேசிக் கொண்டே இருந்திருக்கிறார். சட்டென்று கவனித்த புடின், keep quiet என்று அதிரடியாக கர்ஜிக்க, அவ்வளவு தான் சப்த நாடியும் அடங்கியவராக திகைத்து போனார்.
பின்னர், புடினுடன் சேர்ந்து அந்த பெண்ணும், தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுக்க நின்றுள்ளார். இந்த சம்பவம் பல நாட்கள் ஆன நிலையில், திடீரென்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இவர் தான்ய்யா அதிபர், செம சூப்பர் என்று தூள் கிளப்ப ஆரம்பித்துவிட்டனர்.