இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் TOP 10 செய்திகளை பார்க்கலாம்:
பொங்கல் பண்டிகைக்காக இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் தொடங்கி உள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதலில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் பலியான நிலையில், ஜம்முவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 9ம் தேதி பயணம் மேற்கொள்கிறார்.
வைகை அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
நிலநடுக்கத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் ஜப்பானுக்கு உதவ தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறி இருக்கிறார்.
சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கலைஞர் 100 விழா இன்று மிக பிரம்மாண்ட முறையில் நடக்க இருக்கிறது.
பள்ளிக்கட்டணம் செலுத்தக் கோரி வற்புறுத்தியதால் 9ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தில் பயணிகள் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டதில் 5 பேர் உடல் கருகி பலியாகினர்.
595வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைப் படத்தின் வரும் 18ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.