Sunday, May 04 12:27 pm

Breaking News

Trending News :

no image

ஸ்ரீமதி இறுதி சடங்கில் கடைசி நிமிட மாற்றம்..! என்ன காரணம்..?


கள்ளக்குறிச்சி: ஸ்ரீமதியின் உடலை எரிக்க வேண்டாம், அடக்கம் செய்யலாம் என அவரது குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

ஒரு பள்ளி மாணவியின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்றால் அது ஸ்ரீமதி மரணமாக தான் இருக்க முடியும். கிட்டத்தடட அவரது மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி குழப்பமான சூழல் நிலவி வரும் தருணத்தில் கோர்ட் அறிவுரையை ஏற்று ஸ்ரீமதி உடலை பெற்றோர் பெற்றுக் கொண்டனர்.

2 முறை மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இருந்தாலும் அதன் முடிவுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை. இந் நிலையில் இன்று காலை உடலை பெற்றுக் கொண்டுவிட்ட நிலையில் பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் உடல் எரிக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால் எரிக்க வேண்டாம்… உடலை புதைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன. ஜேசிபி வாகனங்கள் உதவியுடன் அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஒரு வேளை பிரேத பரிசோதனை முடிவுகளில் ஏதேனும் சிக்கல் இருந்தால் என்ன செய்வது? உடலை எரித்தால் பிரேத பரிசோதனை செய்யமுடியாது. எனவே எரிக்கும் முடிவில் மாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் பிரேத பரிசோதனை செய்யும் வகையில் புதைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

Most Popular