இந்த உலகத்துக்கு காத்திருக்கும் மெகா ஆபத்து…! WHO வெளியிட்ட 'பகீர்' விஷயம்
உலக நாடுகளில் டெல்டா வைரஸ் பெரும் ஆபத்தை ஏற்படுத்த போவதாக உலக சுகாதார அமைப்பு பகீர் தகவலை வெளியிட்டு உள்ளது.
இந்த உலகம் நூற்றாண்டுகள் கழித்து கொரோனா என்னும் கொடிய வைரசின் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ஒன்றல்ல, இரண்டல்ல…. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகள் இன்னமும் கொரோனாவின் தாக்கத்தில் இருக்கின்றன.
நாள்தோறும் பாதிப்புகள், பலி எண்ணிக்கை என அனைத்தும் ஏறுமுகமாக இருக்கும் அதே நேரத்தில் கொரோனாவின் அடுத்த தலைவலியாக ஒரு முக்கிய விஷயத்தை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ளது. டெல்டா வைரசானது உலகம் முழுவதும் இப்போது ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒன்றாக மாறியிருக்கிறது என்று கூறி இருக்கிறது.
அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் இந்த தகவலை கூறி இருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: இந்த டெல்டா வைரஸ் மிக மோசமாக பரவக்கூடிய வைரஸ். ஆகவே தான் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் உருமாறிய வைரசாக மாறி வருகிறது என்று கூறி இருக்கிறார்.
பிரிட்டனில் டெல்டா வைரஸ் பரவியதால் தான் அங்கு பாதிப்புகள் மிக கடுமையாகின. ஏராளமானோர் டெல்டா வைரசால் கடுமையாக பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டது. பிரிட்டன் மட்டுமல்ல…. சிங்கப்பூரிலும் டெல்டா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. அமெரிக்காவிலும் நிலைமை மோசமாக இருப்பதற்கு காரணமே டெல்டா வைரஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.