Sunday, May 04 12:24 pm

Breaking News

Trending News :

no image

பெண்ணிடம் செயின் பறித்து… அடித்து இழுத்துச் செல்லும் திக் திக் வீடியோ


திருச்சி: திருச்சியில் நடந்து சென்ற பெண்ணை தாக்கி செயின் பறித்துவிட்டு அவரை தரதரவென்று இழுத்து செல்லும் காட்சிகள் பார்ப்போரை அதிர்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக இருப்பவர் சீதாலட்சுமி. 53 வயதான அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பள்ளி மைதானத்தின் அருகே தமது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.

அவர் தனியாக இருப்பதை கண்ட மர்ம நபர், ஒருவர் கட்டையால் அடித்து அவரின் தங்க சங்கிலியை பறித்தார். பின்னர் சீதாலட்சுமியை தரதரவென்று சாலையில் அனைவரும் பார்க்க, பார்க்க இழுத்து சென்று அவரின் செல்போன், பணம், இருசக்கர வாகனத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி உள்ளார்.

இந்த கொடூர வீடியோ வெளியாகி பார்ப்போரை அதிர வைத்துள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வீடியோவை தொடர்ந்து களத்தில் இறங்கிய போலீசார், தஞ்சையை சேர்ந்த செந்தில் என்பவரைகைது செய்துள்ளனர். அவருக்கு காலில் மாவுக்கட்டு போட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Most Popular