நீங்க அப்படின்னா நாங்க இப்படி..! ஆளுநருக்கு செக் வைத்த CM ஸ்டாலின்….!
சென்னை; மசோதாக்களை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியதற்கு பதிலடியாக முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கை பெரும் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
ஆளுநர் ரவிக்கும், திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் இடையேயான பனி போர் இன்னமும் ஓயவில்லை. இப்போதைக்கு ஓயாது என்பதுதான் யதார்த்தமான கள நிலவரம். குறிப்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு அவர் இன்னமும் ஒப்புதல் தரவில்லை. இதுதொடர்பாக தமிழக அரசு சுப்ரீம்கோர்ட் கதவை தட்டி இருக்கிறது.
லேட்டஸ்ட்டாக 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பி இருக்கிறார். அதன் விவரம் வருமாறு;
*சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
*தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
*தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
*தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
*தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
*தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
*தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
*தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
*அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
*தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட திருத்த மசோதா
ஆளுநரின் நடவடிக்கை இப்படி இருக்க… அதற்கு பதிலடியாக முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி முடிவு எடுத்துள்ளார். அதன்படி சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் நினைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதை மெய்ப்பிக்கும் வகையில் லேட்டஸ்ட்டாக கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொடரில் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.