நான் கிறிஸ்துவன்…! உதயநிதி வச்ச டுவிஸ்ட்…!
சென்னை: தான் ஒரு கிறிஸ்துவன் என்பதில் பெருமை கொள்வதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டி வருகின்றன. தமிழகத்தில் இந்த கொண்டாட்டங்கள் வெகு ஜோராக நடக்க ஆரம்பித்துள்ளன.
சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நான் ஒரு கிறிஸ்துவன்… அதை சொல்வதில் எனக்கு பெருமை. நீங்கள் எல்லாரும் என்னை கிறிஸ்துவன் என்று அழைத்தால் நான் கிறிஸ்துவன்.
இந்து என்று அழைக்கிறீர்களா? அப்போது நான் இந்து, இல்லை முஸ்லிம் என்று அழைத்தால் நான் முஸ்லிம்.
எனக்கு என்றுமே சாதி, மதம் கிடையாது. பிறப்பால் நாம் அனைவரும் சமம். இதை தான் நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.
தமிழகத்தை மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் கையாள்கிறது. 21700 கோடி ரூபாய் பேரிடர் இழப்பாக கேட்டும் ஒரு ரூபாய் கூட அளிக்கவில்லை.
ஆனால் குஜராத்துக்கு அதிக நிதி உதவி கிடைக்கிறது. தமிழகத்துக்கு உதவி செய்ய மத்தியில் ஆளும் அரசுக்கு மனது இல்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டி அரசியல் செய்கிறார் என்று கூறி உள்ளார்.