லாக்டவுனில் மாடு மேய்க்கும் பிரபல டிவி தொகுப்பாளினி…!
சென்னை: கொரோனா லாக்டவுன் காலத்தில் பிரபல டிவி தொகுப்பாளினியான மணிமேகலை மாடு மேய்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
இப்போது கொரோனா லாக்டவுன்காலம்…. எல்லோரின் நிலைமையும் எக்கு தப்பாக தான் இருக்கிறது. இதில் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்ற பாகுபாடே இல்லை. அவரவர் அவர்களுக்கு தகுந்தாற்போல் தினசரி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
சிலர் தமது வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளை யுடியூபில் வீடியோவாக எடுத்து ரிலீஸ் செய்து வருகின்றனர். அப்படி ஒரு தொலைக்காட்சி பிரபலம் லாக்டவுனில் மாடு மேய்த்ததை வீடியோவை எடுத்து வெளியிட்டு ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
அவர் வேறு யாருமல்ல… குக் வித் கோமாளி மூலம் அனைவரையும் கவர்ந்த மணிமேகலை சொந்தமாக யுடியூப் சேனல் ஒன்றை வைத்து இருக்கிறார். கணவருடன் யுடியூப் சேனல் எக்கச்செக்கமான வீடியோக்களை பதிவேற்றி உள்ளார்.
அதில் லேட்டஸ்டாக கணவர் ஹூசைன் உடன் கிராமத்தில் தங்கி இருந்திருக்கிறார். லாக்டவுன் காலம் என்பதால் மாடு மேய்க்க அவர் கணவருடன் கிளம்பும் வீடியோவையும் வெளியிட்டு உள்ளார். அவரின் மாடு மேய்க்கும் வீடியோ இணையத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்று தந்திருக்கிறது.