ஓபிஎஸ் லைனில் 20 மாஜி அமைச்சர்கள்…? அனல்பறக்கும் அதிமுக பாலிடிக்ஸ்
சென்னை: ஈபிஎஸ்சுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வத்துடன் 20 மாஜி அமைச்சர்கள் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் கசிந்து பரபரக்க வைத்துள்ளன.
அதிமுகவில் ஒற்றை தலைமையாக இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு பெற்றுள்ளார். ஆனால் அது செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு இருக்கிறது.
அதே நேரத்தில் யாரிடம், யார் தொடர்பில் உள்ளனர், யார், யாரை பற்றி என்ன என்ன பேசினார்கள் என்று தினம் ஒரு தகவல் அரசியல் களத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
இந் நிலையில் ஓபிஎஸ்சிடம் 20 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்பில் இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. எடப்பாடியிடம் உடன் இருப்பவர்கள் யார்? ஆதரவாளர்கள் யார்? ஓபிஎஸ்சிடம் உள்ளவர்கள் எத்தனை பேர் என்று தெரியாமல் இருக்கிறது.
பல மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து ஓபிஎஸ்சுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனராம். இந்த தகவல் எடப்பாடிக்கும் தெரியப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.