கடும் அதிருப்தி…! 24 பேர் பதவி பணால்… ஸ்டாலின் கையில் பட்டியல்…?
சென்னை: திமுகவில் 24 பேரின் பதவிகளை பறிக்க முதலமைச்சரும், கட்சி தலைவருமான ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் இப்போது அனைத்து கட்சிகளிலும் ஒருவருக்கு ஒரு பதவிதான் போல… அதற்கு சமீபத்திய உதாரணம் நடிகை ரோஜா. அவரது பதவியை இப்படித்தான் அதிரடியாக பறித்தார் ஜெகன் மோகன் ரெட்டி.
இதே விவகாரம் தான் இப்போது திமுகவிலும் விரைவில் எதிரொலிக்க போவதாக தெரிகிறது. அதாவது கட்சி, ஆட்சி இவை இரண்டிலும் பொறுப்பு வைத்துள்ளவர்கள் இனி அப்படி இருக்க முடியாது, ஏதேனும் ஒன்றில் இருந்து கட்டம் கட்டலாம் என்று திமுக தலைமை நினைத்திருக்கிறதாம்.
தற்போதுள்ள நிலவரப்படி திமுகவில் இருப்பது 77 மா.செ.க்கள். இந்த 77 மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் அமைச்சர்கள். அதிமுக ஆட்சியிலும் இருந்த போதும் இந்த பார்முலா இருந்தது. மா செ.க்கள் அமைச்சர்களாக இருப்பார்கள். கழகங்களுக்கு இது பொதுவான பார்முலா என்று இன்னமும் பேசப்படுவது உண்டு.
தற்போது இதை மாற்ற வேண்டும் என்று ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இரண்டு பொறுப்புகளிலும் சரிவர செயல்படாமல் உள்ளதே அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது சில அமைச்சர்கள், பினாமி, உறவினர்கள் பெயரில் சொத்துகளை அள்ளி குவிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் தலைமை கடும் அதிருப்தியில் உள்ளதாம்.
ஆகையால் 2 குதிரைகளில் சவாரி செய்பவர்களை ஒரு குதிரையில் மட்டும் பயணிக்க வைக்கலாம் என்று ஸ்டாலின் முடிவெடுத்துள்ளாராம். யார், யார் பணி தொய்வில் உள்ளது என்பதையும் அவர் பட்டியல் எடுத்து உள்ளாராம்.
புகாரில் சிக்கி இருக்கும் மாவட்ட செயலாளர்கள், கட்சியின் நிர்வாகிகள், குறிப்பாக மூத்த நிர்வாகிகள் ஆகியோருக்கு கேட் பாஸ் கொடுக்கவும் கட்சி தலைமை தீர்மானித்துள்ளதாம்.
அப்படி நீக்கப்படுபவர்களின் பதவிகள், புதியதாக கட்சிகளில் இணைபவர்கள், கட்சிக்காக இன்றளவும் தீவிரமாக உழைக்கக் கூடியவர்களுக்கு அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கசிந்து இருக்கின்றன.
இவ்வாறு பட்டியல் இடம் பெற்ற உள்ளவர்களில் 24 அமைச்சர்களும் அடக்கமாம். அதாவது 24 அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட உள்ளதாம். துடிப்பான மா,செ.க்களை நியமிக்க தலைமை ரெடியாகி இருக்கிறதாம்… விரைவில் அதிரடி ரெடியாகும் என்கின்றனர் அறிவாலய பிரமுகர்கள்…!